காஷ்மீரில் கண்ணி வெடியில் சிக்கி இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி லெப்டினன்ட் ரிஷி குமார் மற்றும் சிப்பாய் மன்ஜித் சிங் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு வீரர் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ராணுவத்தினரே ஆங்காங்கு கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments