பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் திவ்யா, இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார் திவ்யா.
திவ்யா கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வனப் பணி தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தனது முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா, அடிப்படையில் பி.இ. எலக்ட்ரானிக்கல் எலக்ட்ரிக் இஞ்சினியரிங் (இ.சி.இ) பட்டதாரி. தனது பட்டப்படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகதத்தில் படித்து உள்ளார் அவர்.
தனது இந்திய வனப் பணி தேர்வின் வெற்றி குறித்து நம்மிடையே பேசிய திவ்யா, “நான் இந்த யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுமே காரணம். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பணிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவேன். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற யு.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றி பெற்று பொது மக்களுக்கு சேவை செய்ய பலரும் முன்வரவேண்டும்” என்றார்.
தொடர்புடைய செய்தி: செவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்
- அஜ்மீர் ராஜா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments