சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தை முன்னிட்டு ஏர் பபிள் (air bubble) முறையில் 28 நாடுகளுக்கு தற்காலிக வெளிநாட்டு விமானச் சேவையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நடைமுறை தொடரும் என்றும், சரக்கு விமானங்களுக்குத் தடை இருக்காது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் வர்த்தக விமானங்களுக்கான தடை நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments