ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த குருந்தங்குடியில் குடும்பத் தகராறில் கட்டிய மனைவியின் கழுத்தில் கோடரியால் வெட்டி கொலை செய்ததாக கணவனை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் வந்த தொழிலாளி ரமேஷுக்கும், அவரது மனைவி சாந்தாவிற்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய்த் தகராறு முற்றிய நிலையில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியின் கழுத்து மற்றும் தலை பகுதிகளில் ரமேஷ் கோடரியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரமேஷ் போலீசில் சரணடைந்த நிலையில், சாந்தாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments