Ticker

6/recent/ticker-posts

Ad Code

காங்கிரசுடன் உறவு முடிந்துவிட்டது - பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் திட்டவட்டம்!

காங்கிரஸ் கட்சியுடன் உறவு முடிந்துவிட்டது, இதுவரை தமக்கு ஆதரவளித்த சோனியா காந்திக்கு நன்றி என்று பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியினருடன் ரகசியமாக தாம் பேசி வருவதாக கூறப்படும் செய்திகளை மறுத்தார். காங்கிரசுடன் உறவு முடிந்துவிட்டது என்றும், இனி காங்கிரஸ் கட்சியில் தாம் நீடிக்கப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். விரைவில் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும் அதன்பின்னர் பாஜக , அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளிடம் விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் படி கேட்டுக் கொண்டு, கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அம்ரீந்தர்சிங் கூறினார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments