அமெரிக்கா ஆதரவு அளித்தாலும் ஐக்கிய நாடுகள் சபையில் சேர தைவானுக்கு உரிமை இல்லை என சீனா கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவில் உள்ள தைவான் விவகாரங்களைக் கவனிக்கும் மா சியாகுவாங் என்பவர், ஐக்கிய நாடுகள் சபை என்பது இறையாண்மை கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அரசு அமைப்பாகும் என்று கூறியதைத் தொடர்ந்து, தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன், தைவான் ஐநா சபையில் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments