சென்னை மணலியில் வயிற்றுவலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணலி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த செல்வி என்ற பெண் அங்குள்ள ஒட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வயிற்றுவலியால் அவதிப்பட்ட செல்வியை பார்க்க வந்த அவரது ஆண் நண்பர் சதாசிவம் அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து எலுமிச்சை கூல்டிரிங்க்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். இதைக் குடித்த செல்வி திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கை வந்த பிறகு தான் செல்வி வயிற்று வலி காரணமாக உயிர் இழந்தாரா அல்லது காலாவதியான குளிர்பானம் குடித்து உயிரிழந்தாரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments