சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த அனைத்து பல்கலைகழக துணை வேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், பணியாளர் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் பல்கலைகழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு துணை வேந்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments