போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் இன்று மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். ஆர்யன் கானுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மும்பையை விட்டு வெளியேறக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்யன் கானின் ஜாமீன் பிணைப்பத்திரத்தில் நடிகை ஜூஹி சாவ்லா கையெழுத்திட்டார். இன்று ஆர்யன் வீடு திரும்ப உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்யனின் வீடு திரும்புதலை முன்னிட்டு ஷாருக்கானின் மன்னத் இல்லம் மின்விளக்குகளால் ஒளிவீசியது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments