மகாராஷ்ட்ராவின் தூலே-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, லாரி, கார்கள், இருசக்கர வாகனங்கள் என்று அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி அப்பளம் போல் நொறுங்கின. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஒரு வாகனம் செய்த தவறால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments