Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 44 கோடியாக உயர்வு - மத்திய அரசு

ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 44 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகர் மனிஷா சென்சர்மா,  நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகையில் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு துவக்கி வைத்த தாக தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு தொடங்கி பராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வருவதால் இந்த கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments