Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத்தொகையாக 44 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு

ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 44,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயை கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடனாக பெறப்பட்ட இந்த தொகை மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 44,000 கோடி ரூபாயை ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments