இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 மலையேற்ற வீரர்களின் உடல்கள் பனிக்குவியலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. பருவா பாஸ் அருகே 15 ஆயிரம் அடி உயரத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை 17வது பட்டாலியன் வீரர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து வந்தனர். மலையேற்ற வீரர்கள் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி அங்கு டிரக்கிங் பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments