டெல்லியில் நவம்பர் முதல் தேதியில் இருந்து திரையரங்குகள் 100 சதவீதப் பார்வையாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 நள்ளிரவு முதல் பல்வேறு ஊரடங்குத் தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது. DDMA எனப்படும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இது குறித்த வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. திருமணங்களுக்கும் இறுதிச் சடங்குகளுக்கும் 200 நபர்கள் வரை பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments