Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய எல்லைக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்

கடந்த மாதம் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்ரகாண்ட் மாநிலத்தில் பரஹோட்டி என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. சில மணி நேரம் அப்பகுதியில் சுற்றித் திரிந்த சீனர்கள் பின்னர் தங்கள் எல்லைக்குள் திரும்பிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு இந்தோ, திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments