ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை வடிவமைத்துள்ளது. தரையிலிருந்து ஆளில்லா வான் இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை , ஒடிசாவில் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது வானத்தில் உள்ள ஆளில்லாத டிரோன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., அமைப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments