2022 ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண மெயின்லேண்ட் சீனா மாகாண மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான கொள்கை விளக்க அறிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது. சர்வதேச பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மெயின்லேண்ட் சீனா மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments