பண்டிகைக் காலங்களில் வெளியில் கூட்டமாக திரளாமல் வீட்டிலேயே இருக்குமாறும் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறும் மத்திய அரசு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார நிபுணரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே. பால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் அதனை பரவ அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குடும்பத்தினருடன் பண்டிகைகளைக் கொண்டாடவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்யவும் டாக்டர் வலியுறுத்தியுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments