வங்கக் கடலில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சூறையாடிய குலாப் புயல் வலுவிழந்த போதும் அதன் தாக்கம் காரணமாக அரபிக் கடலில் புதிய புயல்சின்னமாக வலுப்பெற்று வருகிறது. இன்று அது மேற்க்கு கரைகளில் பலத்த காற்றுடன் வீசும் என்றும் நாளைக்கு அது பாகிஸ்தானை நோக்கி நகர்ந்துவிடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சவுராஷ்ட்ரா, கொங்கண் மண்டலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments