Ticker

6/recent/ticker-posts

Ad Code

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த கேப்டன் அம்ரீந்தர்சிங்- அரசியல் திருப்புமுனையா?

அரசியல் பயணமாக டெல்லிக்கு வந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், காங்கிரஸிலிருந்து ஓரம் கட்டப்பட்டதால் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போதும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரவே தாம் அமித் ஷாவை சந்தித்தாக  அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இன்று பாஜகவின் இதர மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்துவை சமாதானம் செய்ய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் முயற்சி மேற்கொண்டுள்ளார். தாம் குறிப்பிடும் சில அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சித்து தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments