டெல்லியில் சேலை கட்டி வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததாக எழுந்த புகாரையடுத்து ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஓட்டல் மூடப்பட்டது. ஆண்ட்ரூஸ் கஞ்ச் பகுதியில் உள்ள அன்சல் பிளாசா என்ற ஓட்டலில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.ஓட்டலில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.சேலை அணிந்ததால் தம்மை ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட வாக்குவாத வீடியோவையும் பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து 48 மணி நேரத்திற்குள் ஓட்டலை மூடும்படி மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments