தெலுங்கானா மாநிலத்தில் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. யாதாத்ரி புவனகிரி மாவட்டத்திலுள்ள கூடூரு டோல் பிளாசாவில் பணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டி காரை நிறுத்தியிருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காரினுள் இருந்தவர்கள் விரைந்து வெளியேறிய நிலையில், கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. நிறுத்தப்பட்ட கார் எரிந்து சேதமடைந்தது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments