4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதைப் பற்றி அறியும் வகையில் அடுத்த மாதம் வியாழனின் மர்மமான ட்ரோஜன் விண்கற்களுக்கு நாசா விண்கலத்தை அனுப்ப உள்ளது. ட்ரோஜன் விண்கற்கள் சூரியனை இரு பட்டைகளாகச் சுற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள நாசா, அந்தப் பட்டைகள் வியாழன் கிரகத்தின் முன்னும் பின்னுமாக சுற்றி வருகின்றன. இந்த விண்கற்களை ஆராய்வதன் மூலம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவானதை அறிய முடியும் என நாசா கூறியுள்ளது. இதற்காக லூசி எனப் பெயரிடப்பட்ட விண்கலத்தை அடுத்த மாதம் 16 ம் தேதி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments