பண்டிகைக் காலங்களில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான உறுதியான வேகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், பண்டிகைக்காலங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் தக்க முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 31 வரை கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments