கால்பந்து மைதானம் அளவுள்ள குறுங்கோள் ஒன்று கடந்த வாரம் பூமியைக் கடந்து சென்றதாகவும், ஆனால் சூரியன் மறைத்துக் கொண்டதால் தாமதமாகக் பார்க்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2021 எஸ் ஜி என்று பெயரிடப்பட்ட குறுங்கோள் ஒன்று கடந்த 16ம் தேதி பூமிக்கு அருகே கடந்த சென்றது. சுமார் 138 முதல் 308 அடி விட்டம் கொண்ட அந்தக் குறுங்கோளை நியோ தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் குறுங்கோள் பூமியிலிருந்து ஒரு லட்சத்து 53 ஆயிரம் மைல் தொலைவில் கடந்து சென்றதாகவும், இதனால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments