வீட்டைக் கண்காணிக்கும் புதிய வகை ரோபோவை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஸ்ட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, நாய்க்குட்டி போன்று செயல்படுகிறது. கண்காணிப்பு, வழக்கமான நடைமுறைகள் மற்றும் நினைவூட்டல் பணிகளை இந்த ரோபோ மேற்கொள்ளும். ஆயிரத்து 500 டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அஸ்ட்ரோ ரோபோவின் அறிமுக விலை ஆயிரம் டாலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரோ ரோபோவிடம் உள்ள திரை மூலம் நாம் வெளியில் இருந்தவாறே வீட்டைக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments