பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான பாபர் என்ற இளைஞனை எல்லை அருகே ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். யூரி பகுதியில் 8 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற போது அவர்களுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். 6 தீவிரவாதிகள் பின்வாங்கி பாகிஸ்தான் எல்லைக்கு தப்பிச் சென்று விட்டனர். அப்போது ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாபர் என்ற 19 வயது இளைஞன் ராணுவத்தினரிடம் சரண் அடைந்தான். தீவிரவாதிகளிடமிருந்து வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படிப்பு வராததால் 50 ஆயிரம் ரூபாய்க்காக தனது உயிரை இழக்க ஒப்புக் கொண்ட அவனை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments