மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, மத்திய ஆயுதப் போலீஸ் படையின் 20 கம்பெனிகள் அத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய போதும், தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார். ஆறு மாதத்திற்குள் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதால், இந்த வெற்றியை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் மேலும் 2 தொகுதிகளிலும் இன்று இடைதேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments