Ticker

6/recent/ticker-posts

Ad Code

எண்ணெய் கப்பலுக்கும், கம்போடிய அரசுக்கும் நீடிக்கும் பிரச்னை: இந்திய மாலுமிகளை சிறைப்பிடித்தது இந்தோனேஷியா

கச்சா எண்ணெய் பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாததால் தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி உள்பட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சா எண்ணெயை பிரித்தெடுப்பதற்காக கம்போடியா அரசுக்கும் அப்ஸரா என்ற எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் MT ஸ்ட்ரோவோலஸ் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஊழியர்கள் கச்சா எண்ணெயைத் திருடியதாக சர்வதேச காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கையை கம்போடிய அரசு பெற்றது. ஆனால் 3 லட்சம் பீப்பாய் எண்ணெய் தங்களுக்கே சொந்தம் என கப்பல் நிறுவனம் கூறி வரும் நிலையில், இந்தோனேஷியா சென்ற கப்பலையும், அதிலிருந்த 13 இந்திய மாலுமிகளையும் அந்நாட்டு அரசு சிறைப்பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments