வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையின் 3-வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகா வாட்டும், இரண்டாம் நிலையில், 2 அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாவது நிலையில் உள்ள 3-வது பிரிவில் நிலக்கரியை துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments