Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொலை செய்துவிட்டு பைத்தியம் போல நாடகமாடியவர் கைது..! வீணான ராஜதந்திரம்

கும்பகோணத்தில் தன்னுடைய மேலதிகாரியை கொலை செய்துவிட்டு, மருத்துவமனையில் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நாடகமாடிய ஊழியரை போலீசார் மூன்று நாட்கள் கண்காணித்து கைது செய்தனர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் இயற்கை விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவன மண்டல மேலாளரான இவர் கும்பகோணத்தில் கடந்த 24-ந்தேதி மீட்டிங்கிற்காக வந்திருந்தார். சம்பவத்தன்று கும்பகோணம் அருகே மனஞ்சேரி காவிரி ஆற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து வெங்கடேஸ்வரனுடன் கடைசியாக இருந்த சக ஊழியர் ஆடுதுறை மருத்துவகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரை போலீசார் தேடிச் சென்றபோது, தனக்கு மனநிலை சரியில்லை என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்த மனநல மருத்துவரிடம், மனநிலை சரியில்லை எனக்கூறி சிகிச்சைபெறும் அன்பு, உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா என்பதை பரிசோதனை செய்து தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரண்டு போலீசாரை மாறுவேடத்தில் மருத்துவமனையில் இருக்கச் செய்து, அன்புவின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் இரண்டு போலீசார் கடந்த மூன்று நாட்களாக இரவுபகலாக அன்புவின் செயல்பாடுகளை கண்காணித்தனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் உள்ளபோது அன்பு கை,கால்களை அசைத்தபடி, 'நான் ஒரு பைத்தியம், நான் ஒரு பைத்தியம்' என புலம்பியபடியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது சகஜமாக எப்போதும் போல் தனது மனைவியிடம் பேசியதையும் கண்டுபிடித்தனர் இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதைப் போலீசார் தெரிந்து கொண்டனர். அன்புவை பரிசோதனை செய்த தஞ்சை மருத்துவ கல்லூரி மனநல மருத்துவர்களும் அவர் சீரான மனநலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து அன்புவை கும்பகோணம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் தங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரத்தில் அருகிலிருந்த கூர்மையான தகடால் வெங்கடேசனின் கழுத்தை அறுத்ததாகவும், போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக அவ்வாறு நடித்ததாகவும் அன்பு கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நாடகமாடிய அன்புவை கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதில் இருந்து தப்பிக்க என்னதான் நாடகமாடினாலும், எதிர்பாராத நேரத்தில் அந்த நடிப்பு புஸ்வானமாகிவிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments