Ticker

6/recent/ticker-posts

Ad Code

வீடு வீடாய் தாவிச்சென்ற அரைடவுசர் அர்ணால்டு... வீதியில் தவித்த ஏட்டையா..!

ஆரணியில் போலீசுக்கு பயந்து வீடுகளில் மேல் கூரைகளில் தாவித்தாவி தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமி, அரைமணி நேர விரட்டலுக்கு பின்னர் போலீசாரிடம் சரண் அடைந்தான். தடை தாண்டுதல் ஓட்டத்தையே மிஞ்சும் வகையில் வீடு தாண்டி ஓட்டம் எடுத்து போலீஸை தவிக்க விட்ட அரைடவுசர் அர்னால்டு இவர் தான்..! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே மதுக்கடையில் தகராறு செய்து கொண்டிருந்த அரை டவுசர் ஆசாமியை மடக்கிய போலீஸ் ஏட்டு ஒருவர், அவனை வளைத்து பிடித்து விசாரிக்க, தனக்கு வேலூர் என்று சொன்னதோடு ஏட்டையாவுக்கு டாடா காட்டிவிட்டு ஓட்டம் எடுத்தான். ஏட்டையா விரட்ட... அவன் ஓட... பள்ளிக்கூடத் தெருவில் நுழைந்த அவன் பக்கத்தில் இருந்த சுவற்றில் தாவிக்குதித்து ஒரு வீட்டின் மாடிக்கு சென்றான். அவனைப் பிடிக்க முடியாமல் ஏட்டையா வீதியில் தவித்து நின்றார். அங்கிருந்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு உதவும் நோக்கில் அவனைத் துரத்தினார். அவர் அருகில் வந்ததும் கில்லி போல ஒவ்வொரு வீடாக தாவிக்குதித்து தப்பிச்சென்றான் அரைடவுசர் ஆசாமி. இருந்தாலும் அந்த இளைஞர் அரைடவுசர் அர்னால்டை விடாமல் பின்தொடர்ந்தார். அதற்குள்ளாக ஒரு கடையில் மேற்கூரையில் இருந்த தகரத்தை உடைத்துப் பிடிக்க வருபவர்களை தாக்குவதற்குத் திட்டமிட்டான். அவனது போதாத காலம் தகரத்தை பெயர்த்து எடுக்க முடையவில்லை. கீழே போலீசும் பொதுமக்களும் சுற்றி நிற்க, மேலே அந்த இளைஞர் அவனை நெருங்கினார், அவனை பிடித்து தள்ளி விடும்படி கீழிருந்து குரல்கள் எழுந்த நிலையில், 'ஒன்னும் செய்ய மாட்டேன் கீழே வா' என்று ஏட்டையா சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார் தப்பிக்கவே முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த அரைடவுசர்ஆசாமி கூரையில் இருந்து கிழே குதித்தான். அவனை கப்பென்று பிடித்த ஏட்டையா ஏண்டா இப்படி ஓடினாய் ? என்று கேட்க, நீங்க பயமுறுத்தியதால் ஓடினேன் என்று விளக்கம் அளித்தான். அரை போதையில் இருந்த அந்த இளைஞரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் வைத்து முறையாக விசாரித்த போது, வேலூரை சேர்ந்த அவன், ஆரணி பகுதியில் கஞ்சாபொட்டலம் வாங்கிகொண்டு மது வாங்கச் சென்றபோது, பணம் பற்றாக்குறையால் மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அங்கு வந்த ஏட்டையா அவனிடம் சற்று கம்பீரம் காட்டியதால் மிரண்டு போன போதை ஆசாமி வீடு வீடாய் தத்தி தாவி ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. ((spl gfx out))அதே நேரத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கத் தவறினால் இது போன்ற இன்னும் பல கூத்துக்கள் தினமும் அரங்கேறும் என்று அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments