நடிகை நயன்தாரா, காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments