இந்தியாவின் தினசரி கோவிட் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டியது. 5 முறை ஒரு கோடி இலக்கை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் முறையாக ஒரு கோடி தினசரி இலக்கு எட்டப்பட்டது. பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை ஒட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி இரண்டரை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 86 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 22 கோடி பேருக்கு மேல் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments