வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 டன் குட்கா போதைப் பொருள் பிடிபட்டன. வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் சரக்கு ரயிலில் மின்சாரப் பொருட்கள், செல்போன்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 4 டன் அளவிற்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் மின்சாரப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments