Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறிவைத்து மோசடி : பணம் எடுத்துத் தருவது போல் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதி ஏ.டி.எம்.களில் முதியவர்களுக்கு பணம் எடுத்து தருவது  நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதியவர்கள், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறிவைத்து பணம் எடுத்து தருவது போல் நடித்து, ரகசிய எண்களை தெரிந்து கொண்டு ஏ.டி.எம். கார்ட் செயழிலந்துவிட்டது எனக் கூறி போலி கார்டுகளை வழங்கி சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. பல்வேறு பகுதி சிசிடிவிகளை ஆராய்ந்த போலீசார், விக்னேஷ், சிவானந்தம், பீட்டர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் 17 ஏடிஎம் கார்டுகள் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments