கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் திருமணமான 6 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி, மாமியார், மச்சினிச்சி என மூன்று பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ராய்ச்சூரைச் சேர்ந்த வைஷ்ணவியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் என்பவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வைஷ்ணவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்ட நிலையில், செல்போனில் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த சாய் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஆத்திரத்தில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து வைஷ்ணவியை சாய் தாக்கிய நிலையில், தடுக்க வந்த மாமியார் சந்தோஷி, மனைவியின் தங்கை ஆர்த்தி ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments