சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இன்று பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய இத்திட்டம் மத்திய மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ராய்ப்பூரில் தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனத்துக்கு புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை வழங்குவதுடன், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுடன் பிரதமர் உரையாடுகிறார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments