இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு பேருக்கு இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 23 கோடி இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் மூலமாக கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது நோய்க்கு எதிரான யுத்தத்தில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments