பறவைகள், மீன்கள் ஆகியவற்றில் 23 வகையான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மீன்கள் மற்றும் வனஉயிரின அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 11 வகையான பறவைகள், ஒரு வவ்வால் இனம், இரு மீன்கள் வகை, 8 வகையான சிப்பி இனம் ஆகியவை முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் மிகப் பெரிய மரங்கொத்தியான தந்தம் போன்று கடினமான வாயமைப்பு கொண்ட அந்தப் பறவை 1967ம் ஆண்டுக்குப் பின் காணப்படவில்லை. இதேபோல் பேச்மென்ஸ் வாப்ளர் என்ற பாடும் பறவையும் 67ம் ஆண்டுக்குப் பின் பார்க்கப்படவில்லை. இது மனிதர்களால் ஏற்பட்ட மாபெரும் அழிவு என்று கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments