பல்வேறு ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்கி விருதுகள் வென்ற 12 வயது கேரள இயக்குனர், 30 நாட்களில் போதை விழிப்புணர்வு குறித்து வணிக ரீதியிலான படத்தை இயக்கி உள்ளார். கொச்சியை சேர்ந்த 12 வயதான ஆஷிக் 6 குறும்படம், ஒரு ஆவணப்படம், உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளார். தற்போது போதை விழிப்புணர்வு குறித்த ஈ.வி.ஏ. என்ற பெயரில் வணிக ரீதியிலான படத்தை 30 நாட்களில் இயக்கி உள்ளார். சென்னையில் திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தனது திரைப்படத்தை நடிகர் அஜித்திடம் காண்பித்து, அவரை வைத்து வருங்காலத்தில் படம் இயக்க ஆர்வம் உள்ளதாக இளம் இயக்குனர் ஆஷிக் தெரிவித்துள்ளார்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments