தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துள்ளது. குயாகுவில் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டுகளை வீசி இரு குழுவினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் 6 கைதிகள் தலை துண்டிக்கப்பட்டும், 24 பேர் அடித்தும் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து 100க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஏராளமானோர் பலியாகினர். இதையடுத்து சிறைச்சாலைக்கு வந்த போலீசாரும், ராணுவத்தினரும் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments