ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபருக்கு கைவிலங்கு பூட்டப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிட்னி நகரின் புறநகர் பகுதியான ஜார்ஜ் ஹால் என்ற இடத்தில் பூங்கா ஒன்றில் தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்தவர் முகக் கவசம் அணியவில்லை என்று குறிப்பிட்டு போலீசார் அவரின் கைககளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டனர். இதனைக் கண்ட வழிப்போக்கர் ஒருவரும் இளைஞருக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஏதும் அறியாத அந்தக் குழந்தை இளைஞரின் மடியில் அமர்ந்ததால் மனமிறங்கிய போலீசார் குறிப்பிட்ட இளைஞரை விடுவித்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments