மத்தியப் பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளிச் சென்ற நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹர்தா ரயில் நிலையத்தில் பழுதான ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து கைகளால் தள்ளிச் சென்றனர். அவர்களில் சிலர் காலணி கூட அணியாமல் கூர்மையான ஜல்லிக்கற்களில் மிகவும் சிரமப்பட்டு ரயிலைத் தள்ளிச் சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பணி குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments