ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா பாதுகாப்பு நாடுகள் பயண பட்டியலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், கொசோவோ, லெபனான், மாண்டினீக்ரோ, வடக்கு மசடோனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருபவர்களுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகள் கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்படு உள்ளது. கொசோவோ, மாண்டினீக்ரோ உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவை சிவப்பு பட்டியலில் வைத்துள்ள போதும், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி வழங்கி உள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments