இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை மீண்டும் அனுமதியளித்துள்ளது. இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்கள் சென்னைக்கும், 3 விமானங்கள் மும்பைக்கும், ஒரு விமானம் பெங்களூருக்கும் இயக்கப்படும். விரைவில் கொழும்பில் இருந்து திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு வாரம் ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments