Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா.... கட்டுப்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் நெருக்கம் மிகுந்த கடைப்தெருக்களில்  பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிறில் இயங்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகை மற்றும் துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள், மால்கள் சனி மற்றும் ஞாயிறில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள், பேக்கரிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும்  அனுமதி என்றும் 50சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகள் 50சதவிகித கடைகளுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments