Ticker

6/recent/ticker-posts

Ad Code

தாலிபானின் சுப்ரீம் தலைவர் விரைவில் மக்கள் முன் தோன்றுவார்.!

தாலிபான்கள் இயக்கத்தின் தலைவர் ஹிபத்துல்லா அகுன்ட்ஜாதா (Hibatullah Akhundzada) கந்தகார் நகரில் இருப்பதாகவும் அவர் விரைவில் மக்கள் முன்னிலையில் தோன்றுவார் என்றும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இதுவரை பொது இடத்தில் தன்னை வெளிப்படுத்தாமல் இருந்து வந்த தாலிபான் சுப்ரீம் தலைவர் பல ஆண்டுகளாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகிறார். அவர் முதன்முதலாக பொதுமக்கள் முன்பு தோன்றுவார் என்றும் புதிய அரசுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹூல்லா முஜாஹித்(Zabihullah Mujahid) தெரிவித்துள்ளார்.  அவர் நீண்டகாலமாகவே கந்தகாரில் தான் இருப்பதாகவும், தாலிபான் தெரிவித்துள்ளது. தங்கள் தலைவரை மறைத்து வைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே தாலிபான்களுக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments