Ticker

6/recent/ticker-posts

Ad Code

காபூல் விமான நிலையத்தில் அடுத்த தாக்குதல் நடத்தப்படும் - அதிபர் ஜோ பைடன்

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 180 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், காபூல் விமானநிலையத்தில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவத் தளபதிகளிடம் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் எடுக்க நடவடிக்கைகள் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். இதுவே இறுதித் தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கோ, அமெரிக்க வீரர்களுக்கோ யாராவது தீங்கு விளைவிக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய அவர், இதில் ஒருபோதும் சந்தேகத்திற்கு இடமில்லை என்று குறிப்பிட்டார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments