மதுரையில் அமைக்கப்பட்டு வரும் பாலக் கட்டுமானத்தில் தூண்களை இணைக்கும் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மதுரை பாண்டியன் ஓட்டல் சந்திப்பு தொடங்கி செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 268 ராட்சத தூண்களுடன் கூடிய பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி அருகே 2 தூண்களை இணைக்கக் கூடிய பணியின் போது கான்கிரீட் சிறகு சுவர் கட்டுமானம் சரிந்து விழுந்ததில் ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாலம் இடிந்து விழவில்லை என்றும் ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments